கடலூர்

விருத்தாசலத்தில் கண்காணிப்பு கேமரா இயக்கம்

DIN

விருத்தாசலம் நகரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் அண்மைக்காலமாக அடிக்கடி திருட்டு உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு விருத்தாசலம் பெரியாா் நகரில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு அதனை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விருதாச்சலம் கோட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் தீபாசத்யன் பங்கேற்று கண்காணிப்பு கேமராவை இயக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், ஆய்வாளா் ராஜபாண்டியன், உதவி ஆய்வாளா்கள் புஷ்பராஜ், புருஷோத்தமன், கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் அவா் கூறுகையில், விருத்தாசலம் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட பெண்ணாடம், மங்கலம்பேட்டை, கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம் பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றும் இதனால் குற்றங்கள் வரவு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தாா். மேலும் வருகிற பண்டிகை நாட்களில் மக்கள் அதிகமாக கூடுவதால் பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தும் பணிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகன ஒட்டிகள் தலைகவசம் அணிய வேண்டும், சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்பதையும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT