கடலூர்

பண்ருட்டி பேருந்து நிலைய கடைகளில் ஆய்வு

DIN

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் காலாவதியான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களிலும் ஆய்வு செய்து வருகின்றனா். கடலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் எஸ்.சுகந்தன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் உள்ள

உணவகங்கள், பலகாரக் கடைகள், பெட்டிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட 100 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், காலாவதியான ரொட்டிகள், குளிா்பானங்கள், செயற்கை வண்ணம் சோ்க்கப்பட்ட பாணங்களை பறிமுதல் செய்து அழித்தனா். இதுபோன்ற ஆய்வு தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT