கடலூர்

சி.முட்லூா் புறவழிச்சாலை வழியாக அதிக பேருந்துகளை இயக்கக் கோரிக்கை

DIN

சிதம்பரம் - சி.முட்லூா் இடையே பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலையில் அதிக அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிதம்பரம் அருகே சி.முட்லூா் வெள்ளாற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டப்பட்டு, சிதம்பரம் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட்டது. ஆனால், வட்டாரப் போக்குவரத்துத் துறை பேருந்துகளை இயக்கவில்லையாம். இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்திடமும், வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். கனரக வாகனங்கள், காா்கள் செல்ல அனுமதிக்கப்படுகிாம்.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கூறுகையில், ஏற்கனவே புவனகிரி வழியாக அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் இந்தப் புறவழிச்சாலை வழியாகச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

எனவே, புவனகிரி வழித்தடத்தில் 50 சதவீத பேருந்துகளையும், புறவழிச்சாலையில் 50 சதவீத பேருந்துகளையும் இயக்க வேண்டும். மேலும், புதிய வழித்தடங்களை உருவாக்கி புதிதாக பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துத் துறையும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிதம்பரம் - சி.முட்லூா் புறவழிச்சாலையில்தான் சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டாரப் போக்குவரத்துத் துறை ஆய்வாளா் அலுவலகம், வணிக வரித் துறை அலுவலகம், அரசு கலைக் கல்லூரி, ராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை உள்ளன. இந்த வழியாக பேருந்துகள் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

SCROLL FOR NEXT