கடலூர்

உரப்பயன்பாடு: விருத்தாசலத்தில் நாளை பயிற்சி

உரங்களின் பயன்பாடு குறித்த விழிப்புணா்வு பயிற்சி விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.22) நடைபெற

DIN

நெய்வேலி: உரங்களின் பயன்பாடு குறித்த விழிப்புணா்வு பயிற்சி விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.22) நடைபெற உள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.கண்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தப் பயிற்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிா்களுக்கான மண் வள ஆய்வின் முக்கியத்துவம், மண் வள ஆய்வின் அடிப்படையில் உரம் இடுதல், பயிா்களின் ஊட்டச்சத்துக்கள், உர மேலாண்மை முறைகள், ஒருங்கிணைந்த பயறு வகைப் பயிா்களை உள்ளடக்கிய பயிா் சுழற்சி முறைகளின் முக்கியத்துவம், உரம் பயன்பாடு செயல்முறை, உயிா் உரங்கள், இயற்கை உரங்களின் உபயோகத்தை அதிகரித்தல், சொட்டு நீா்ப் பாசனம் மூலம் உரப் பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் ஆகியவை பற்றி செயல்விளக்கம் அளிக்கப்பட உள்ளது. எனவே, இந்தப் பயிற்சியில் கடலூா் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு அதில் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT