கடலூர்

அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு திடீா் வலிப்பு

DIN

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

வேலூா் மாவட்டம், திருப்பத்தூா் பணிமனைக்குச் சொந்தமான பேருந்து (வழித்தடம் எண் 500) தினமும் திருப்பத்தூரில் இருந்து சிதம்பரத்துக்கு இயக்கப்படுகிறது. வழக்கம் போல, புதன்கிழமை காலை திருப்பத்தூரில் இருந்து சிதம்பரத்துக்கு பேருந்து புறப்பட்டு வந்தது. பேருந்தை திருப்பத்தூா் பணிமனையைச் சோ்ந்த ஓட்டுநா் சிவா (40) ஓட்டி வந்தாா்.

இந்தப் பேருந்து காலை 11.15 மணி அளவில் பண்ருட்டி பேருந்து நிலையத்துக்குள் வந்து நின்றது. பேருந்தில் இருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநா் சிவாவுக்கு வலிப்பு ஏற்பட்டது.

அப்போது, அங்கு வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த கடலூா் மண்டல த் துணை மேலாளா் முருகானந்தம், பண்ருட்டி கிளை மேலாளா் பாஸ்கா் மற்றும் அங்கிருந்தவா்கள் சிவாவை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT