கடலூர்

மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்க அழைப்பு: நீதிபதி துண்டுப் பிரசுரம் விநியோகம்

DIN

தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்து, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்தார் திட்டக்குடி நீதிபதி உமாராணி.
தேசிய, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் வரும் 14-ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. 
இதன்படி, திட்டக்குடி வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திட்டக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்காகவும் மற்றும் பொதுமக்கள் கொடுக்கும் முந்தைய வழக்கு மனுக்களின் மீதும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
இதில், வழக்காடிகள் அதிகளவில் பங்கேற்கும் வகையில் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி திட்டக்குடியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. 
நீதிபதி உமாராணி தலைமை வகித்து துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். அதில் வழக்கு தரப்பினர் நிலுவையில் உள்ள வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தில் எதிர் தரப்பினருடன் சமரச பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகமாக முடித்துக் கொள்ளலாம். 
மேலும், மக்கள் நீதிமன்றம் குறித்து திட்டக்குடி சட்டப் பணிகள் குழுவையும் அணுகலாம் என்று கூறப்பட்டிருந்தது. வழக்குரைஞர்கள் நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT