கடலூர்

ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

பண்ருட்டி, காவல் துறை குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு திங்கள்கிழமை காலை விநாயகர் வழிபாடு, மகாகணபதி ஹோமம் மற்றும் முதல்கால யாக பூஜைகள் நடைபெற்றன.  செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன. புதன்கிழமை காலை 6 மணியளவில் நான்காம் கால யாக பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. பின்னர், கலசம் புறப்பாடு கோயில் வலம் வந்து காலை சுமார் 10- மணிக்கு சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் ஓதி கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சந்தோஷ்குமார், பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜி.நாகராஜ், ஆய்வாளர் பி.சண்முகம், கோயில் நிர்வாகி பி.எஸ்.ஆதிசேஷன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதியுலா நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT