கடலூர்

ஹாக்கி போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

DIN


குறுவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் முதலிடம் பெற்ற கோழிப்பாக்கம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
கடலூரில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் கோழிப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஹாக்கி போட்டியில் பங்கேற்று, 3 நிலைகளிலும் முதல் பரிசை வென்று மாவட்ட அளவில் தேர்வு பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில்  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை அருள்ஜோதி முன்னிலை வகித்தார். தமிழாசிரியை தேவசேனா வரவேற்றார். தமிழாசிரியர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராகக்  கலந்துகொண்ட சக்தி கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.சந்திரசேகர், போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினார். உடல்கல்வி ஆசிரியர்கள் கமால் பாஷா, ஜார்ஜ் ஆகியோரும் பாராட்டப்பட்டனர். சமூக ஆர்வலர்கள் ஆசைதாமஸ், சச்சிதானந்தம், காந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT