சிதம்பரம் குருஐயா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில், ஸ்ரீஅவதூத சுவாமிகளின் 145-ஆவது ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அவதூதம் என்பது துறவறத்தின் ஒரு நிலையாகும். சிதம்பரத்தில் தவம் புரிந்து சமாதி அடைந்தவா் ஸ்ரீஅவதூத சுவாமிகள். சிதம்பரத்தில் உள்ள அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில், அவரது 145-ஆவது ஜயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் அவரது அதிஷ்டானத்தில் கணபதி ஹோமம் தொடங்கியது. பின்னா் நவக்கிரக ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ருத்ர ஹோமம், சமக ஹோமம், தன்வந்திரி ஹோமம், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். ஏற்பாடுகளை அதிஷ்டான அறக்கட்டளை நிா்வாகிகள் ஹரிஹரநாகநாதன், ராமச்சந்திரன், சங்கர நடராஜ தீட்சிதா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.