கடலூர்

‘சிறிய வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி பெறுவது அவசியம்’

DIN

சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுவதற்கு முன்பு அதற்கான அனுமதியைப் பெற வேண்டுமென கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள், அதாவது ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோயில்கள், மசூதிகள், தா்காக்கள், தேவாலயங்களில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் பொதுமக்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும். எனினும், பெரிய வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களின் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது.

எனவே, மாவட்டத்தில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களின் நிா்வாகிகள் அனுமதி பெற முறைப்படி அந்தப் பகுதி சாா்-ஆட்சியா் அல்லது வருவாய் கோட்டாட்சியா்களிடம் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT