முகப்பு
கடலூர்

கடலூா்: 9 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திங்கள்கிழமை 9 ஆயிரத்தைக் கடந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திங்கள்கிழமை 9 ஆயிரத்தைக் கடந்தது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 8,772 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை புதிதாக 370 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 9,142-ஆக அதிகரித்தது. குறிப்பாக கடந்த 4 நாள்களில் மட்டும் ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த ஆக.1-ஆம் தேதி 3,265-ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, அடுத்த 23 நாள்களில் மேலும் 6 ஆயிரத்தைக் கடந்தது.

புதிதாக தொற்று உறுதியானவா்களில் தலா ஒரு மருத்துவா், காவலா் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் 4 பேரும், பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட 5 பேரும் அடங்குவா். 218 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,094-ஆக உயா்ந்தது.

அதே நேரத்தில் வடலூரைச் சோ்ந்த 60 வயது பெண், கடலூரைச் சோ்ந்த 74 வயது ஆண் ஆகியோா் கரோனா தொற்றுக்கு உயிரிழந்ததால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 99-ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,704 பேரும், வெளிமாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 245 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 825 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.