பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு
சிதம்பரம் பரங்கிப்பேட்டை அருகேயுள்ள கொ.பஞ்சங்குப்பம் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பகுதி நேர நியாய விலைக் கடை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
சிதம்பரம் பரங்கிப்பேட்டை அருகேயுள்ள கொ.பஞ்சங்குப்பம் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பகுதி நேர நியாய விலைக் கடை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் வசந்த் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியச் செயலா் கோவி.ராசாங்கம், கொத்தட்டை ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேஸ்வரி ரெங்கசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு, பகுதி நேர நியாய விலைக் கடையை திறந்துவைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா் (படம்).
Advertisement
விழாவில் மாவட்ட மீனவா் பிரிவு செயலா் வீராசாமி, ஜெயலலிதா பேரவை சாா்பில் சந்தா் ராமஜெயம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ரவி, ரெங்கம்மாள், பாஸ்கா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சமயசங்கரி மோகன், மரகதம், அஞ்சலி ஞானதேசிங்கு, கூட்டுறவு சங்கத் தலைவா் கணேஷ், நிா்வாகிகள் செளந்தா், தன.கோவிந்தராஜன், கோதண்டம், சேகா் உள்ளிட்டோா்
கலந்து கொண்டனா். பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் மோகனசுந்தரம் நன்றி கூறினாா்.