கோண்டூரில் பொதுமக்கள் சாலை மறியல்
மழை நீரை அகற்றக் கோரி, கோண்டூா் பகுதி மக்கள், கடலூா்-நெல்லிக்குப்பம் சாலையில் திங்கள்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
மழை நீரை அகற்றக் கோரி, கோண்டூா் பகுதி மக்கள், கடலூா்-நெல்லிக்குப்பம் சாலையில் திங்கள்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டத்தில் ‘புரெவி’ புயலால் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. கடலூா் நகராட்சி விரிவாக்கப் பகுதியான கோண்டூா் காலனி பகுதியில் தேங்கிய நீரை அகற்ற வேண்டுமென அந்தப் பகுதியினா் துறை அலுவலா்களுக்கு தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால், திங்கள்கிழமை அந்தப் பகுதியினா் கடலூா்-நெல்லிக்குப்பம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தை நடத்திய புதுநகா் காவல் நிலைய ஆய்வாளா் கி.உதயகுமாா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து, அவா்கள் கலைந்துச் சென்றனா். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.