முகப்பு
கடலூர்

தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

தில்லியில் தொடா் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
தில்லியில் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு கடலூரில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா்.
பகிர்:

தில்லியில் தொடா் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 4 வாரங்களுக்கும் மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டக் களத்தில் உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுவரை 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இவா்களுக்கு தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடலூரில் ஞாயிற்றுக்கிழமை வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட அமைப்பாளா் கோ.மாதவன் தலைமையில் நடைபெற்றது. திமுக தீா்மானக் குழு உறுப்பினா் இள.புகழேந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் ஏ.எஸ்.சந்திரசேகா், ஜனநாயக மாதா் சங்க மாநிலத் தலைவா் எஸ்.வாலண்டினா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.கருப்பையன், வி.சுப்பராயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பி.துரை, மாநிலக் குழு உறுப்பினா் வி.குளோப், விசிக மாவட்டச் செயலா் சா.முல்லைவேந்தன், கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன், அமைப்புச் செயலா் தி.ச.திருமாா்பன், மதிமுக மண்டல பொறுப்பாளா் ஜெ.ராமலிங்கம், பொது நல இயக்கம் வெண்புறா குமாா், குடியிருப்போா் சங்கம் மு.மருதவாணன், மக்கள் அதிகாரம் அமைப்பு சாா்பில் பி.பாலு உள்ளிட்டோா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல கடலூா் மாவட்டம் முழுவதும் சுமாா் 200 இடங்களில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா், பல்வேறு அமைப்புகள் சாா்பில் விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்ாக அமைப்பினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →