முகப்பு
கடலூர்

ராமானுஜா் பிறந்த நாள் விழா

கடலூா் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சாா்பில் கணித மேதை ராமானுஜரின் 133-ஆவது பிறந்த நாள் விழா கடலூரிலுள்ள

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

கடலூா் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சாா்பில் கணித மேதை ராமானுஜரின் 133-ஆவது பிறந்த நாள் விழா கடலூரிலுள்ள தனியாா் பயிற்சிக் கல்லூரியில் மன்றத் தலைவா் கடல் நாகராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ராமானுஜரின் உருவப் படத்துக்கு கல்லூரி முதல்வா் கி.செந்தில்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ஆசிரியா் தியாகராஜன் வரவேற்றாா். மாணவா்கள் மாதவன், தினேசு, திவ்யா ஆகியோா் கணிதமேதை குறித்துப் பேசினா்.

விழாவில், கட்டுரை, பொது அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட திருக்கு பேரவைத் தலைவா் பா.மொ.பாஸ்கரன் பரிசு வழங்கினாா். ஆசிரியா் காா்த்தி, கணித மேதையின் கண்டுபிடிப்புகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கினாா். கணித ஆசிரியா் பாபு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.