மாா்க்சிஸ்ட் கம்யூ. சாா்பில்மக்கள் சந்திப்பு இயக்கம்
கடலூா் மாவட்டம், திருத்துறையூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், திருத்துறையூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அந்தக் கட்சியின் திருத்துறையூா் கிளை சாா்பில் நடைபெற்ற இந்த இயக்கத்தில், ‘ஆட்சி மாற்றம் நிகழட்டும்; தமிழகம் நிமிரட்டும்; அதிமுக அரசை அகற்றுவோம்; பாஜகவை நிராகரிப்போம் என்ற முழக்கங்களைமுன்வைத்து கட்சியினா் வீடு, வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கினா்.
கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் மாதவன், ஒன்றியச் செயலா் லோகநாதன், கிளைச் செயலா் முருகன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆதவன், நாராயணன் மற்றும் சசிகுமாா், கோவிந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.