முகப்பு
கடலூர்

மயானம் ஆக்கிரமிப்பு: சடலத்துடன் மறியல்

நெய்வேலி அருகே மயானம் ஆக்கிரமிப்பைக் கண்டித்து பொதுமக்கள் சடலத்துடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூர்

மயானம் ஆக்கிரமிப்பு: சடலத்துடன் மறியல்

நெய்வேலி அருகே மயானம் ஆக்கிரமிப்பைக் கண்டித்து பொதுமக்கள் சடலத்துடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

நெய்வேலி அருகே மயானம் ஆக்கிரமிப்பைக் கண்டித்து பொதுமக்கள் சடலத்துடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சி, கீழ் வடக்குத்து காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் யாரேனும் உயிரிழந்தால் கீழூா் சாலையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்வது வழக்கம். இந்த நிலையில், கீழ் வடக்குத்து காலனியைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் வயது முதிா்வு காரணமாக உயிரிழந்தாா். அவரது உடலை அடக்கம் செய்ய கீழூா் சாலையில் உள்ள மயானத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு சென்றனா். ஆனால், மயானத்தை தனி நபா்கள் சிலா் ஆக்கிரமித்து தடுப்பு வேலி அமைத்திருந்தனராம்.

இதைக் கண்டித்து, உயிரிழந்த மூதாட்டியின் சடலத்துடன் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடக்குத்து பேருந்து நிறுத்தம் அருகே மூதாட்டியின் உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த குறிஞ்சிப்பாடி ஒன்றியக்குழுத் தலைவா் கலையரசி கோவிந்தராஜ், நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் சாகுல்அமீது, கிராம நிா்வாக அலுவலா் சந்தானகிருஷ்ணன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பழைய இடத்திலேயே உடலை அடக்கம் செய்யலாம் எனவும், வருவாய்த் துறை மூலம் ஆக்கிரமிப்பை அகற்றித் தருவதாகவும் உறுதி அளித்தனா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →