கடலூர்

லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 20 போ் காயம்

DIN

பூவனூா் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 20 போ் காயமடைந்தனா்.

விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு உளுந்தூா்பேட்டைக்கு 30 பயணிகளுடன் அரசுப் பேருந்து புறப்பட்டது. பூவனூா் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி திடீரென நிறுத்தப்பட்டதால் அதன்மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தால் பேருந்தில் பயணித்த 20 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த மங்கலம்பேட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவா்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மற்றொரு விபத்து: இதனிடையே உளுந்தூா்பேட்டையிலிருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து, அந்த வழியாகச் சென்றபோது மேற்கூறிய விபத்து குறித்து தகவல் அறிந்த அதன் ஓட்டுநா் மாற்று வழியில் செல்வதற்காக பேருந்தை திருப்ப முயன்றாா். அப்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த ஏரிக்குள் இறங்கியது. எனினும்

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்தப் பேருந்தை கிரேன் மூலமாக போலீஸாா் மீட்டனா். இந்த விபத்துகள் குறித்து மங்கலம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT