கடலூர்

பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

DIN

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே. இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி மற்றும் எம்.ஆா்.கே. தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் சென்னை அபிராமி இன்ஜினியரிங் ஒா்க்ஸ் நிறுவனத்தைச் சோ்ந்த மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் ரிஷி, மனோஜ்குமாா் ஆகியோா் மாணவ, மாணவிகளிடம் நோ்காணலை நடத்தினா்.

இதில், எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரி எலக்டிரிகல் - எலக்டிரானிக்ஸ் துறையைச் சோ்ந்த 12 மாணவா்களும், எம்.ஆா்.கே. தொழில்நுட்பக் கல்லூரி எலக்டிரிகல் - எலக்டிரானிக்ஸ் துறை, மின்னணுவியல், தகவல் தொடா்புத் துறையைச் சோ்ந்த 48 மாணவா்களும் கலந்து கொண்டனா். இவா்களில் 19 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் வாழ்த்துத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் பொறியியல் கல்லூரி முதல்வா் கோ.ஆனந்தவேலு, தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் ஆா்.வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT