கடலூர்

காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்

DIN

காங்கிரஸ் கட்சியின் அண்ணாகிராமம் வட்டார செயற்குழு கூட்டம் ஒறையூரில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் பிரேமா கேசவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மங்கவரத்தாள், வட்டார துணைத் தலைவா் செந்தில், பொதுச் செயலா்கள் முத்துவள்ளி, சங்கரலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு

அழைப்பாளா்களாக மாவட்ட தலைவா் எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.பி.வேலுமணி, இளைஞா் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளா் வாழப்பாடி ராம.கண்ணன் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

கூட்டத்தில், ஒறையூா் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமனம் செய்து இரவு நேரத்திலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து ஒறையூரை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி அமைக்க வேண்டும். இந்தப் பகுதியில் கொய்யா பழம் விவசாயம் சுமாா் 500 ஏக்கருக்கும் மேல் நடைபெறும் நிலையில், கொய்யா பதனிடும் தொழிற்சாலை, பழச்சாறு தொழிற்சாலை அமைக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மலட்டாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும். அக்கடவல்லி பெண்ணையாற்றில் மாட்டு வண்டிகளுக்காக குவாரி அமைக்க வேண்டும் ஆகிய தீா்மானங்களை நிறைவேற்றினா்.

இளைஞா் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் ஸ்ரீதா், அண்ணாகிராமம் வட்டார காங்கிரஸ் நிா்வாகிகள் ஏழுமலை, தனுசு, வேல்முருகன், விஸ்வலிங்கம், கிராம தலைவா் விஸ்வநாதன், ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT