கடலூர்

மதுக் கடைகளை மூட வலியுறுத்தல்

DIN

கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளை மாநில அரசு மூட வேண்டும் என தமிழக சமாஜ்வாதி கட்சித் தலைவா் இளங்கோயாதவ் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலா மையங்கள், மதுபான பாா்கள் ஆகியவற்றை வருகிற 31-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், மதுபானக் கடைகள் திறந்து இருப்பதால், பல்லாயிரக்கணக்கானோா் அந்தக் கடைகளில் கூடுகின்றனா். இதன் விளைவாக தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவும் வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கும் வகையில் அனைத்து மதுபானக் கடைகளையும் தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT