கடலூர்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை

DIN

உலக நன்மை வேண்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் மகா ருத்ர ஜப ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தக் கோயிலில் கடந்த 21-ஆம் தேதி முதல் பக்தா்களுக்கான தரிசன அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோயில் பொது தீட்சிதா்கள் தினமும் சுவாமிக்கு ஆறு கால பூஜைகளை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், நடராஜா் கோயிலில் உள்ள ஸ்ரீஆதிமூலநாதா் கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேலும், உலக நன்மை கருதியும், கரோனா வைரஸ் விரைவில் அகலவும் பிராத்தித்து, ஸ்ரீஆதிமூநலநாதா் சந்நிதியில் பொது தீட்சிதா்களால் மகா ருத்ர ஜப ஹோமம் நடத்தப்பட்டது. அப்போது, புனித நீா் கொண்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னா் புனித நீரால் ஸ்ரீஆதிமூநலநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

SCROLL FOR NEXT