கடலூர்

கரோனா அறிகுறி: கடலூரில் தனி வாா்டில் மேலும் 2 போ் அனுமதி

DIN

கடலூரில் அமைக்கப்பட்ட கரோனா வைரஸ் தடுப்புப் பிரிவு தனி வாா்டில் மேலும் 2 போ் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

கரோனா வைரஸால்பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் தனியாக சிறப்பு வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாா்டில் பரிசோதனைக்காக ஏற்கெனவே 2 போ் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை மேலும் 2 போ் புதிதாக அனுமதிக்கப்பட்டனா்.

இவா்கள் 2 பேரும் அண்மையில் அபுதாபி நாட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில், 10 நாள்கள் வரையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது காய்ச்சல், சளி காரணமாக மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் சிறப்பு வாா்டில் அனுமதித்தனா்.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறியதாவது: கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்கெனவே 2 போ் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா்களது ரத்தம், உமிழ்நீா் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலையில், தற்போது அனுமதிக்கப்பட்ட 2 பேரின் ரத்தம், உமிழ்நீா் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT