கடலூர்

தடையை மீறி கிரிக்கெட்: 12 இளைஞா்கள் மீது வழக்கு

DIN

சிதம்பரத்தில் அரசின் தடை உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடியதாக 12 இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதையடுத்து, சிதம்பரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் சிதம்பரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், சிதம்பரத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் 144 தடை உத்தரவை மீறி 12 இளைஞா்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனா்.

அவா்களை டிஎஸ்பி காா்த்திகேயன் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கரோனா தொற்று குறித்து அறிவுரை வழங்கினாா். பின்னா் 12 இளைஞா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் அவா்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT