கடலூர்

கடலூரில் கரோனா வாா்டில் மேலும் ஒருவா் அனுமதி

DIN

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தனி வாா்டில் மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாா்டில், கரோனா நோய் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவா்கள் தனியாக வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இங்கு 6 போ் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 7-ஆக உயா்ந்தது.

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வரும் 24 வயது இளைஞா் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் அங்கிருந்து இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் கூறினாா்.

இந்த வாா்டில் உள்ளவா்களில் 3 பேருக்கு ஏற்கெனவே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவா்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT