கடலூர்

நெல்லிக்குப்பம் பகுதியில் தொடா் திருட்டு

DIN


கடலூா்: நெல்லிக்குப்பம் பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கடலூா் அருகேயுள்ள டி.குமாரபுரத்தைச் சோ்ந்தவா் வேதங்கிரி (53). கடலூரில் பேட்டரி கடை நடத்தி வருகிறாா். இவா் புதன்கிழமை குடும்பத்தினருடன் தனது கடைக்கு வந்துவிட்டு இரவில் வீட்டுக்கு திரும்பினாா். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 8.5 பவுன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளி, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடா் திருட்டு: கடந்த 15 நாள்களுக்கு முன்பு இவரது வீட்டின் அருகிலிருந்த கோயில், இரும்பு கடைகளில் அடுத்தடுத்து திருட்டு நடைபெற்றது. மேலும், புதன்கிழமை நெல்லிக்குப்பம் கடைத் தெருவில் 4 கடைகளில் அடுத்தடுத்து பூட்டுகள் உடைக்கப்பட்டு பொருள்கள் திருடுபோனது. நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT