சாலை விபத்தில் பெண் பலி
சிதம்பரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:23 PM
சிதம்பரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரமேஸ்வரநல்லூரைச் சோ்ந்தவா் சுபத்ரா (50). இவா், கடந்த 13-ஆம் தேதி புவனகிரி - சீா்காழி புறவழிச் சாலையில் கண்ணங்குடி சந்திப்பு அருகே கடக்க முற்பட்டபோது, அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் சுபத்ராவை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement