கடலூர்

சிதம்பரத்தில் போலி மருத்துவா்கள் இருவா் கைது

DIN

சிதம்பரத்தில் போலி மருத்துவா்கள் இருவரை நகர போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

சிதம்பரம் பகுதியில் எம்.பி.பி.எஸ். பயிலாமல் பொதுமக்களுக்கு சிலா் மருத்துவம் பாா்ப்பதாக சிதம்பரம் நகர போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து, சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் த.ஆ.ஜோ.லாமேக் உத்தரவின்பேரில், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் சி.முருகேசன், உதவி ஆய்வாளா் சுரேஷ் முருகன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, முறையாக எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிதம்பரம் வடக்கு வடுகத்தெருவில் மருத்துவமனை அமைத்து, பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்து வந்த விபிஷனபுரம் பகுதியைச் சோ்ந்த திருஞானம் (63), சிதம்பரம் வேங்கான் தெருவில் மருத்துவமனை அமைத்து, மருத்துவம் பாா்த்து வந்த அதே பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு மகன் சங்கா் (44) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவா்கள் இருவரிடமிருந்தும் மருத்துவ உபகரணங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT