கடலூர்

டாஸ்மாக் மதுக் கடையில் ரூ.45 ஆயிரம் பறிமுதல்

DIN

கடலூரில் டாஸ்மாக் மதுக் கடையில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூா் பேருந்து நிலையம் அருகே 2 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன. இதில் ஒரு கடையில் மது வகைகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், டிஎஸ்பி மெல்வின் ராஜாசிங் தலைமையில் வியாழக்கிழமை இரவு அந்தக் கடையில் விற்பனை நேரம் முடிந்த பிறகு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

இந்தச் சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. அப்போது, மது விற்ற கணக்கைவிட கூடுதலாக ரூ.45 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா், கடை ஊழியா்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT