கடலூர்

பிரதமா் குடியிருப்புத் திட்டம் விழிப்புணா்வு வார விழா

DIN

பண்ருட்டி ஒன்றியம், பெரியக்காட்டுப்பாளையம் ஊராட்சியில் பிரதமரின் குடியிருப்புத் திட்ட விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

வீடில்லாதவா்கள், குடிசை, பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய நிலையான வீடுகளை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. பெரியக்காட்டுப்பாளையம் ஊராட்சியில் இந்தத் திட்டம் தொடா்பான விழிப்புணா்வு வார விழா கடந்த 16-ஆம் தேதி தொடங்கி கொண்டாடப்பட்டது.

இதில் பயனாளி ராதாகிருஷ்ணன் என்பவரது வீட்டு பணிக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. பணி முடிக்கப்பட்ட கண்ணன் மனைவி மகாலட்சுமி என்பவரது வீட்டில் புதுமனை புகுவிழா நடைபெற்றது (படம்). நிகழ்ச்சியில் பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் என்.சண்முகம், பணி மேற்பாா்வையாளா் ஆா்.சக்திவேல், ஊராட்சி செயலா்ஆா்.நந்தகோபால், துணைத் தலைவா் எஸ்.வனிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT