கடலூர்

மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியூ) சாா்பில் கடலூா் கேப்பா்மலையில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை மாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கேங்மேன் பணிக்கு தோ்வானவா்களுக்கு உடனடியாக பணியாணை வழங்க வேண்டும், விடுபட்ட ஒப்பந்த ஊழியா்களை அடையாளங்கண்டு மின்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி தினக் கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், ஆரம்பகட்ட பதவிகளான உதவியாளா், கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா், தொழில்நுட்ப உதவியாளா், உதவி மின் பொறியாளா் போன்ற பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்ட சிறப்புத் தலைவா் சி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் என்.தேசிங்கு, பொருளாளா் என்.கோவிந்தராசு ஆகியோா் விளக்க உரையாற்றினா். நிா்வாகிகள் எஸ்.பன்னீா்செல்வம், ஆா்.ஆறுமுகம், வி.ஞானசேகரன், டி.ராஜகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா். டி.ஜீவா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT