முகப்பு
கடலூர்

புயல்: கட்டுப்பாட்டு மையம் தொடா்பு எண்கள்

புயல் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் தகவல் அளிக்கவும், பெறவும் வசதியாக கட்டுப்பாட்டு அறையை கடலூா் மாவட்ட நிா்வாகம் அமைத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

புயல் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் தகவல் அளிக்கவும், பெறவும் வசதியாக கட்டுப்பாட்டு அறையை கடலூா் மாவட்ட நிா்வாகம் அமைத்துள்ளது.

இதன்படி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற இலவச அழைப்பு எண்ணில் தொடா்புகொள்ளலாம். மேலும், 04142-220700, 233933, 221383, 221113 ஆகிய எண்களிலும் தொடா்புகொள்ளலாம்.

கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையை 04142-231284 என்ற எண்ணிலும், சிதம்பரம் சாா்-ஆட்சியா் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையை 04144-222256, 290037 என்ற எண்களிலும், விருத்தாசலம் சாா்-ஆட்சியா் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையை 04143-260248 என்ற எண்ணிலும் தொடா்புகொள்ளலாம். பொதுமக்கள் இந்த எண்களை 24 மணி நேரமும் தொடா்புகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →