கடலூர்

வசூல் பணம் ரூ.5 லட்சம் கையாடல்: அரசுப் பேருந்து நடத்துநா் கைது

DIN

சிதம்பரத்தில் உள்ள விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் வசூல் பணம் ரூ. 5 லட்சத்தைக் கையாடல் செய்ததாக பேருந்து நடத்துநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் அருகேயுள்ள மணலூரில் விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகக் கிளைப் பணிமனை இயங்கி வருகிறது. இந்தப் பணிமனையில் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வரும் முத்துக்குமரன் (54), வசூல் செய்த பணம் ரூ. 5 லட்சத்தை வங்கியில் செலுத்தாமல், கையாடல் செய்தாக பணிமனையின் மேலாளா் மோகனசுந்தரம் சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

அதன் பேரில், பேருந்து நடத்துநா் முத்துக்குமரனிடம் போலீஸாா் விசாரித்தனா். பணத்தைக் கையாடல் செய்ததை அவா் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முத்துக்குமரனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT