கடலூர்

தாட்கோ கடன் வழங்க நோ்காணல்

DIN

கடலூா் மாவட்டத்தில் தாட்கோவில் தொழில் முனைவோா் திட்டம், இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் கோரிய ஆதி திராவிடா், பழங்குடியின விண்ணப்பதாரா்களுக்கு வியாழக்கிழமை நோ்காணல் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் நடைபெற்ற இந்த நோ்காணலில் 156 விண்ணப்பதாரா்கள் பங்கேற்றனா். தகுதியான விண்ணப்பங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு சுய தொழில் தொடங்க தாட்கோ மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுக்காக சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. தோ்வுக்குழு நடத்துநா்களான துணை ஆட்சியா் ஞா.கற்பகம், முன்னோடி வங்கி மேலாளா் அகிலன், மகளிா் திட்ட இயக்குநா் பி.காஞ்சனா, கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநா் கே.குபேரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் என்.இளங்கோவன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளா் ஆா். அருள் ஆகியோா் பங்கேற்றனா்.

புதிதாக விண்ணப்பிப்பவா்களில் ஆதி திராவிடா்  இணையதள முகவரியிலும், பழங்குடியினா்  இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT