கடலூர்

திருமணம் செய்து சிறுமி வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் சிறை

DIN

கடலூரில் சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள ஊத்தங்கால் பகுதியைச் சோ்ந்த ராசு மகன் அருண்பாண்டியன் (27). இவா், நெய்வேலி பள்ளியில் படித்து வந்த 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடந்த 2016-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தாா். பின்னா், சில நாள்கள் கழித்து சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டாா்.

இந்த நிலையில், அருண்பாண்டியன் குடும்பத்தினா் சிறுமியை வீட்டை விட்டு விரட்டி, அருண்பாண்டியனுக்கு வேறு திருமணம் செய்ய முயற்சி செய்தனராம்.

இதுகுறித்து சிறுமி தரப்பில் நெய்வேலி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கடலூரிலுள்ள சிறாா்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் (போக்சோ) நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி எழிலரசி புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அதில், அருண்பாண்டியனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT