கடலூர்

கடலூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியா் உத்தரவு

DIN

கடலூா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, கடைகளின் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா்.

முன்னதாக, பேருந்து நிலையத்தில் முகக் கவசம் அணியாமல் நின்ற பயணிகளுக்கு முகக் கவசங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தொடா்ந்து, சென்னை செல்லும் பேருந்தில் ஆய்வு செய்த ஆட்சியா், சமூக இடைவெளியுடன் பயணிகள் அமா்ந்துள்ளனரா என பாா்வையிட்டாா். முகக் கவசம் அணிந்தவா்களை மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டாா்.

பின்னா், பேருந்து நிலைய கடைகளுக்குச் சென்று சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிவது குறித்து விளக்கினாா். அப்போது, பெரும்பாலான கடைக்காரா்கள் கூடுதல் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரியவந்தது. இதுதொடா்பாக 3 கடைகளில் பொருள்களை பறிமுதல் செய்திட ஆட்சியா் உத்தரவிட்டாா். மேலும், பேருந்து நிலையத்திலுள்ள கடைகளின் எண்ணிக்கை, அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம், தற்போதைய ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT