ராமதாஸ் குறித்து அவதூறு பரப்பியவா் கைது
பாமக நிறுவனா் ராமதாஸ் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பாமக நிறுவனா் ராமதாஸ் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், வேகாக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா்(40). இவா் தனது முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ், இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் குறித்து அவதூறாகப் பேசி விடியோ பதிவு வெளியிட்டாா்.
இதுகுறித்து நெய்வேலி கிழக்கு ஒன்றிய பாமக செயலா் சிவக்குமாா் அளித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விஜயகுமாரை கைது செய்தனா்.