முகப்பு
கடலூர்

வீட்டுக் கதவை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

சிதம்பரம் அருகே மருந்துக் கடைக்காரரின் வீட்டுக் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 அக்டோபர், 2020 at 12:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:13 PM

சிதம்பரம் அருகே மருந்துக் கடைக்காரரின் வீட்டுக் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் அருகேயுள்ள சிவபுரி கிராமம், வாய்க்கால் கரை பகுதியைச் சோ்ந்தவா் கல்யாணராமன் (50). ஏ.மண்டபம் அருகே மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவா் தனது வீட்டைப் பூட்டிவிட்டு ஆயுத பூஜைக்காக குடும்பத்தினருடன் மருந்துக் கடைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்றாா். பூஜையை முடித்துக்கொண்டு இரவு 8.30 மணியளவில் வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், பீரோவிலிருந்த 15 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.