முகப்பு
கடலூர்

கடலூரில் இறந்த மோப்ப நாய்க்கு காவல்துறையினர் மரியாதை

கடலூர் மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் பிரிவில்  கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த மோப்பநாய் இறந்ததைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
மோப்ப நாய்க்கு இறுதி மரியாதை செலுத்திய காவல்துறையினர்
பகிர்:

கடலூர் மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் பிரிவில்  கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த மோப்பநாய் இறந்ததைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் பிரிவில்  கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் புருனே எனும் மோப்ப நாய் பணியாற்றி வந்தது. பல வழக்குகளில் துப்பு துலங்க உதவியாக இருந்து வந்த புரூனே அனைவரிடமும் அன்பாகப் பழகி வந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு வயது மூப்பின் காரணமாக புரூனேவிற்கு ஓய்வு வழங்கப்பட்டது. இந்நிலையில் மோப்ப நாய் பிரிவு பராமரிப்பில் இருந்து வந்த புருனே புதன்கிழமை உயிரிழந்தது.

இறந்த மோப்ப நாய்க்கு துணை காவல் கண்காணிப்பாளர்  கங்காதரன் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்)  தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. ஆயுதப்படை காவல் ஆய்வாளர் விஜயகுமார், துப்பறியும் மோப்ப நாய் பிரிவு உதவி ஆய்வாளர் ரவி மற்றும் துப்பறியும் மோப்ப நாய் பிரிவு  காவல்துறையினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கடலூர் மாவட்ட காவல் துறையினரின் இந்த நடவடிக்கை நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →