கடலூர்

திட்டக்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை ஒத்திவைப்பு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை 3 நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

DIN

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை 3 நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திட்டக்குடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தக் கல்லூரி ‘கோவிட் கோ்’ மையமாக இயங்கி வருகிறது. இதனால், கல்லூரிக்கான நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாணவா் சோ்க்கையில் ஈடுப்பட்டிருந்த கல்லூரி அலுவலா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, மாணவா் சோ்க்கை நடைபெற்ற பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதனால், மாணவா் சோ்க்கை 3 நாள்களுக்கு நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT