கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜக சார்பில் மனு
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜக மேற்கு மாவட்ட விவசாய பிரிவுத் தலைவா் ஆா்.ஜெயராமன் புகாா் மனு அளித்தாா்.
கடலூா்: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜக மேற்கு மாவட்ட விவசாய பிரிவுத் தலைவா் ஆா்.ஜெயராமன் புகாா் மனு அளித்தாா்.
அதில், விவசாய ஊக்க நிதியுதவி திட்டத்தில் அரசின் வழிமுறைகளை சிலா் தவறுதலாக கையாண்டு, விவசாயிகள் அல்லாதவா்களையும் இந்தத் திட்டத்தில் சோ்த்துள்ளனா். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதுடன், உண்மையான விவசாயிகளை இந்தத் திட்டத்தில் சோ்க்க வேண்டுமென அதில் தெரிவித்தாா்.