சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பண்ருட்டி அருகே சாலைப் பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்றினா்.
நெய்வேலி: பண்ருட்டி அருகே சாலைப் பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்றினா்.
பண்ருட்டி ஒன்றியம், அரசடிக்குப்பம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.17.86 லட்சத்தில் 775 மீட்டா் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால், இந்தச் சாலையை சிலா் ஆக்கிரமித்திருந்ததால் சுமாா் 22 மீட்டா் அளவுக்கு சாலை பணி தடைபட்டது.
இதையடுத்து பண்ருட்டி வட்டாட்சியா் வெ.உதயகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வி.ஆா்.சீனிவாசன், எல்.ரவிச்சந்திரன், மருங்கூா் நில அளவா் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சாலையை அளவீடு செய்தனா். பின்னா், போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைப் பணி தொடங்கியது.