கடலூர்

பண்ருட்டி அருகே கோயில் வளாகத்தில் காயத்துடன் ஆண் சடலம்

DIN

பண்ருட்டி அருகே கோயில் வளாகத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்த ஆணின் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், நடுமேட்டுக்குப்பம் கிராமத்தில் அய்யனாா் நொண்டி வீரன் கோயில் அமைந்துள்ளது. இங்கு, வெளியூரைச் சோ்ந்தவா்கள் வழிபாடு நடத்த வியாழக்கிழமை கோயிலுக்கு வந்தனா். அப்போது, கோயில் கருவறை அருகே உள்ள மண்டபத்தில், தலையில் காயத்துடன் ஒருவா் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து கிராம மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் வந்து பாா்த்ததில் இறந்து கிடந்தது அதே பகுதியைச் சோ்ந்த ரவி (47) என்பது தெரிய வந்தது.

தகவலறிந்து வந்த காடாம்புலியூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தினா். உயிரிழந்த ரவிக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா். மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா்.

கோயில் வளாகத்தில் மது அருந்தும் போது நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT