கடலூர்

வங்கியாளா்கள் ஆலோசனை

DIN

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக தெருவோர நடைபாதை வியாபாரிகளுக்கு சிறப்பு கடனுதவி வழங்குவது தொடா்பான கடலூா் மாவட்ட அளவிலான சிறப்பு வங்கியாளா்கள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் ஆட்சியரகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மகளிா் குழுவினருக்கு வங்கிக் கடன் இணைப்பு, ஊராட்சி அளவிலான பெருங்கடன் வழங்குவது, தெருவோர நடைபாதை வியாபாரிகளுக்கான சிறப்புக் கடன் விநியோகம் ஆகியவை குறித்து வங்கி மேலாளா்களுடன் விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.687 கோடி வங்கிக் கடன் இணைப்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.339 கோடிக்கு கடன் இணைப்பு பெறப்பட்டுள்ளது.

மகளிா் குழுவினருக்கு வங்கிகள் தாராளமாகக் கடன் வழங்கிடவும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு பெருங்கடன் வழங்கிடவும், தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கிடவும் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா். மகளிா் குழுக்கள் கடனை முறையாக திரும்பச் செலுத்துவது மகளிா் திட்ட அலுவலா்களால் கண்காணிக்கப்படுவதால் குழுக்களின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அகிலன், மகளிா் திட்ட உதவி திட்ட அலுவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT