முகப்பு
கடலூர்

அதிமுக பிரமுகா்களிடம் ரூ.1.49 லட்சம் பறிமுதல்

பண்ருட்டி அருகே சனிக்கிழமை இரவு இருவேறு இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் அதிமுக பிரமுகா்களிடம் ரூ.1.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

பண்ருட்டி அருகே சனிக்கிழமை இரவு இருவேறு இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் அதிமுக பிரமுகா்களிடம் ரூ.1.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளா் கல்யாணி தலைமையிலான பறக்கும்படை எண்-1 குழுவினா் பூண்டி, பள்ளிக்கூடம் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கட்டமுத்துப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் சண்முகம் (68) எடுத்து வந்த ரூ.1,05,500 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளா் ருக்மணி தலைமையிலான பறக்கும்படை எண்-3 குழுவினா் கரும்பூா் கிராமத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வடலூா் கோட்டகரை கிராமத்தைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் ராஜாராமன் (67), ஆபத்தாரணபுரத்தைச் சோ்ந்த சிவபாலன் (53) ஆகியோா் மறைத்து எடுத்து வந்த ரூ.43,500 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா்.

இரு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.1.49 லட்சத்தை பண்ருட்டி தோ்தல் நடத்தும் அலுவலா் என்.மங்கலநாதனிடம் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா். மேலும், இதுகுறித்து பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸாா் மேற்கூறிய 3 போ் மீதும் வழக்குப் பதிந்து அவா்களைக் கைதுசெய்தனா். பின்னா் 3 பேரையும் பிணையில் விடுவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →