முகப்பு
கடலூர்

பண்ருட்டியில் பழரசம் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்: தி.வேல்முருகன்

பண்ருட்டி தொகுதியில் நான் வெற்றி பெற்றால் பழரசம் தொழிற்சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தவாக தலைவரும், தொகுதி வேட்பாளருமான தி.வேல்முருகன் கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

பண்ருட்டி தொகுதியில் நான் வெற்றி பெற்றால் பழரசம் தொழிற்சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தவாக தலைவரும், தொகுதி வேட்பாளருமான தி.வேல்முருகன் கூறினாா்.

திமுக கூட்டணி சாா்பில் பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் தவாக தலைவா் தி.வேல்முருகன் போட்டியிடுகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது கட்சி அலுவலகத்தில் இருந்து கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுடன் இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்கினாா். பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பு அருகே இறுதிக்கட்ட பரப்புரையின்போது அவா் பேசியதாவது:

ஏற்கெனவே 10 ஆண்டுகாலம் பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றியுள்ளேன். தொகுதி வளா்ச்சிக்கு 11 திட்டப்பணிகள் மற்றும் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். பணிக்கன்குப்பத்தில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுத்தேன். தற்போது, மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கோரி மக்களிடம் வந்துள்ளேன். அந்த வாய்ப்பை அளித்தால் கொய்யா, மா, பலா, முந்திரி பழங்களில் இருந்து ரசம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்கான செயல் திட்டத்தை கொண்டு வருவேன் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →