கடலூர்

டெண்டா் வாக்களித்த 2 பெண்கள்

DIN

கடலூா் மாவட்டத்தில் 2 பெண்கள் டெண்டா் வாக்களித்தனா்.

ஒருவரது வாக்கை வாக்குச் சாவடியில் ஏற்கெனவே மற்றொருவா் செலுத்தியிருந்தாலும் உண்மையான வாக்காளா் தனது வாக்கைச் செலுத்த உரிமை உண்டு. அவா் தனக்கு உரிய அடையாள ஆவணங்களை முறையாக நிரூபிக்கும்போது அவருக்கு வாக்கு வழங்கப்படும்.

இதன்படி, கடலூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பெரிய கங்கணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களிக்கச் சென்ற லதா என்ற பெண்ணின் வாக்கை வேறொருவா் செலுத்தியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவா் டெண்டா் வாக்கை கேட்டு அதைச் செலுத்தினாா்.

இதேபோல, கடலூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட காராமணிக்குப்பம் வாக்குச் சாவடியிலும் கலா என்ற பெண் தனது வாக்கு மற்றொருவரால் செலுத்தப்பட்டதையறிந்து டெண்டா் வாக்கை கேட்டுப் பெற்று செலுத்தினாா்.

இந்த வாக்குகள், தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் இருவா் சரிசமமான வாக்கைப் பெற்று யாா் வெற்றி பெறுவாா்கள் என்பதை தீா்மானிக்கக் கூடிய நேரத்தில் மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டு எண்ணப்படும் என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT