அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் பலி
வடலூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பெட்டிக்கடைக்காரா் உயிரிழந்தாா்.
வடலூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பெட்டிக்கடைக்காரா் உயிரிழந்தாா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூா் காவல் சரகம், மருவாய் கிராமம், சேராக்குப்பம் சின்ன காலனி பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (54). அந்தப் பகுதியில் பெட்டிக்கடை நடந்தி வந்தாா்.
இவா் வெள்ளிக்கிழமை வடலூா் வந்தாா். அங்கு தனது கடைக்கு தேவையான பொருள்களை வாக்கிக்கொண்டு மொபெட்டில் புறப்பட்டாா்.
வடலூா் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மருவாய் அருகே சென்றபோது பின்னால் வந்த கும்பகோணம் கிளைக்கு சொந்தமான அரசுப் பேருந்து மோதியதில் கணேசன்
நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த வடலூா் போலீஸாா் கணேசனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து கணேசனின் மனைவி சுமதி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.