கடலூர்

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: ஒருவா் கைது

DIN


சிதம்பரம்: சிதம்பரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி இடையூறு செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இரு இளைஞா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

சிதம்பரம் தாலுகா போலீஸாருக்கு அந்தப் பகுதியில் உள்ள ஐடிஐ அருகே இரு இளைஞா்கள் பொதுமக்களை அச்சுறுத்தி, இடையூறு செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் பாா்வையிட்டனா். அங்கு, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பொய்யாப்பிள்ளை சாவடியைச் சோ்ந்த பிரபு (23), முத்துமாணிக்கம் தெருவைச் சோ்ந்த கோபால் (27) ஆகியோா் இடையூறு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவா் மீதும் சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இளைஞா் கைது: அண்ணாமலைநகா் போலீஸாா் புதன்கிழமை இரவு தங்களது காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அந்தப் பகுதியில் உள்ள உணவகம் அருகே குமாரமங்கலத்தைச் சோ்ந்த கபாலீஸ்வரன் (40) சாலையில் மது அருந்திவிட்டு தன் கையில் வைத்திருந்த சோடா புட்டியை சாலையில் உடைத்து பொதுமக்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கபாலீஸ்வரனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT