முகப்பு
கடலூர்

ஆலயங்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்: நடராஜர் பக்தர்கள் பேரவை

தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் பக்தர்கள் போதுமான பாதுகாப்புடன் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என நடராஜர் பக்தர்கள் பேரவை தமிழகஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:06 PM
பகிர்:

தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் பக்தர்கள் போதுமான பாதுகாப்புடன் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என நடராஜர் பக்தர்கள் பேரவை தமிழகஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து நடராஜர் பக்தர்கள் பேரவை தலைவர் சத்தியமூர்த்தி, செயலாளர் கேப்டன் ஜி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடித விபரம்: சித்திரா பவுர்ணமி நாளில் பக்தர்கள் கோயிலுக்கு வரக் கூடாது என்பது பக்தர்களுக்கு மிகுந்த மன வேதனை ஆற்றாமை அளிக்கிறது. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று இறைவனை கண்டு உயிர் வாழும் பக்தர்கள் தில்லையில் மிகுதியாக உள்ளனர். 

தமிழகஅரசு டாஸ்மாக் கடையில் டோக்கன் கொடுத்து சமூக இடை வெளியுடன் மது பானம் விற்கப்படும் போது தினமும் இரு வேளை குளித்து சுத்தம் சுகாதாரமாக இருக்கும் உள்ளூர் பக்தர்கள் கரோனா விதிமுறைகளை கடை பிடித்து ஆலய வழிபாடு செய்யவும், இறை தரிசனத்துக்கு அனுமதி தர நடராஜர் பக்தர்கள் பேரவை தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. 

திருப்பதியில் கூட இதே முறை கடைபிடிக்க படுவது குறிப்பிடத்தக்கது. எனவே உடன் தடுப்பு முறைகள் போதிய இடைவெளியுடன் பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோயிலிலும், தமிழகத்தில் உள்ள பிற கோயில்களிலும் உள்ளூர் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →